Skip to main content

இயக்குநர் சேரனுக்கு பாரதிராஜாவிடம் இருந்துவந்த திடீர் அழைப்பு!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

Bharathiraja

 

பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கத்தில் கடைசியாக திருமணம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், அடுத்தாக நடிகர் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். அதே வேளையில், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் இமையம் பாரதிராஜா சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் திரைப்படத்தை நேற்று மீண்டும் பார்த்துள்ளார். அப்படத்தினைக் கண்டு வியந்த பாரதிராஜா, இயக்குநர் சேரனை தொலைபேசியில் அழைத்துப் பாராட்ட, உடனடியாக சேரன் பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். 

 

இது குறித்து நெகிழ்ச்சியாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன், "காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு. எடுத்து பேசுகிறேன். அவர் குரல் தழுதழுக்கிறது. "என்னப்பா" என சற்று பதட்டம். ஆட்டோகிராஃப் பார்க்கிறேன். எங்கடா அந்த சேரன்... நீ திரும்ப வரணும்டா என அக்கறையோடு சொல்கிறார். இதோ வந்துட்டேன்ப்பா என அவர் இல்லம் சென்றேன்.ஆசீர்வதித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்