Skip to main content

'மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்ற நினைப்பு அவருக்கு உள்ளது' - தீபிகா படுகோனே பாய்ச்சல் 

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் முன்னேறும் சமயத்தில் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக சில பேட்டிகளில் தெரிவித்தார். இவரை போலவே நடிகர் சல்மான் கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்று தீபிகாவை விமர்சிப்பது போல் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இதை கேட்ட தீபிகா கடும் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசியபோது...

 

Deepika padukone

 

''என் மனஅழுத்தம் என்னவென்றால் போராட்டம் என்பேன். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரும் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. பணம், புகழ், குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்ற நினைப்பு உள்ளது. மன அழுத்தம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு'' என்றார். மன அழுத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 'லிவ் லவ் லாப்' என்ற பவுன்டே‌ஷனை கடந்த 2015 ஆம் ஆண்டு தீபிகா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்