Skip to main content

“என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால்...”- பிக்பாஸ் ஜூலி

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
juliana

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி பின்னர் பிக்பாஸ் முதலாம் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று பலருக்கும் பரிச்சயமானவராக இருப்பவர் ஜூலி. பிக்பாஸுக்கு பின் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

அண்மையில் ஜூலிக்கு திருமணம் நடைபெறபோவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன. இச்செய்தியை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜூலி.

 

 

அதில், “"போலிச் செய்தியைப் பரப்பி என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. என் திருமணம் தொடர்பாக சுற்றிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் போலியானது” என்று தெரிவித்துள்ளார். 

 


 

 

 

சார்ந்த செய்திகள்