Skip to main content

பிக்பாஸ் ஆரவுக்கு திருமணம்! 

Published on 07/09/2020 | Edited on 07/09/2020
arav

 

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதலாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆரவ். 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த ஆரவ், 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

பிக்பாஸ் புகழை தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரவ். இந்நிலையில் ஜோஷ்வா படத்தின் நாயகி ராஹியும் ஆரவ்வும் காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்துகொள்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், நேற்று சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்