Skip to main content

''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

vjv


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாரதிராஜா இப்படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 


''அரியாத வயதில் காமத்தைச் சுமந்து, வெளியில் சொல்லா முடியாமல் வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்தப் 'பொன்மகள்'. இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களைக் கலங்கடித்து விட்டது. இந்தப் "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாகச் சமூகத்தைக் கலங்கடிக்கும்'' எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்