Skip to main content

“உங்களுக்கு தெரியுமா? நீங்க...”- ரஜினியை புகழ்ந்த பியர் க்ரில்ஸ்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் VS வைல்ட்' என்ற நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலமானவர் பியர் க்ரில்ஸ். இவருடன் இணைந்து ஹாலிவுட் நடிகைகள் கேத்தே வின்ஸ்லெட், ஜூலியா ராபர்ட்ஸ், லீனா ஹெட்டே என பல பிரபலங்கள் காட்டுக்குள் பயணம் செய்திருந்தாலும் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து காட்டுக்குள் சென்றது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 

R

 

 

‘இன் டூ தி வைல்ட்’ என்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் பிரபலமாக ரஜினிகாந்த் இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக கர்நாடகா பந்திப்பூர் வனப்பகுதிக்குள் பியர் க்ரில்ஸுடன் இணைந்து ஷூட் செய்துவிட்டு, பின்னர் முள்குத்தியதால் அதிக நேரம் ஷூட்டில் கலந்துக்கொள்ளாமல் திரும்பினார் ரஜினிகாந்த்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி எப்போது ரிலீஸாக போகிறது என்று பலரும் எதிர்பார்ப்பில் இருக்கும்போது வருகிற மார்ச் 23ஆம் தேதி ரஜினி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அண்மையில் டிஸ்கவரி சேனல் புரோமோ வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் பியர் க்ரில்ஸும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது டிஸ்கரி சேனல். அதில் பியர் கிரில்ஸ் ரஜினியின் உத்வேகத்தை பார்த்து வியந்து புகழ்கிறார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்