Skip to main content

அவள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது?

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

siddharth

 

நடிகர் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'அவள்'. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாரான இப்படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மிலிந்த் ராவ் என்ற அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

 

அவள் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் மிலிந்த் ராவ் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கதை மற்றும் திரைக்கதை உருவாக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அவள் படத்தின் முதல் பாகத்தை நடிகர் சித்தார்த் தயாரித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மிலிந்த் ராவ் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளதால், அவள் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்