Skip to main content

சடலமாக மீட்கப்பட்ட நடிகை - திரையுலகினர் அதிர்ச்சி

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

aparna nair case

 

மலையாள திரையுலகில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் அபர்ணா நாயர். மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'எதுவும் நடக்கும்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், 

 

கேரளா திருவனந்தபுரத்தில் வசித்து வரும் அவர் வீட்டில் தூக்கிய தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளா திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த அப்பகுதியின் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

விசாரணையில் நடிகை கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் கடைசியாக அவரது தாயாருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து தன் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் நடிகையின் தாயார் உட்பட நடிகையின் கணவர் மற்றும் தங்கையிடம் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர். நடிகைக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. .

 


 

சார்ந்த செய்திகள்