Skip to main content

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

dhanush

 

சமீபமாக பிரபலங்களின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மர்ம நபர் அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸார் நடத்திய சோதனையில், அது புரளி என்று தெரியவந்துள்ளது.  

 

வெடிகுண்டு மிரட்டல் விட்ட அந்த மர்மநபர் யார் என்பதை தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 

நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதற்கு முன்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதுவும் புரளி என்று போலீஸார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்