Skip to main content

''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்!'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019
anandraj

 

 

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவான 'பிகில்' படத்தில் விஜயுடன் ஆனந்த்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக சிலர் விஜய்யின் தோற்றத்தை மோசமாக கேலி செய்திருந்தனர். இந்நிலையில் இதற்கு தற்போது நடிகர் ஆனந்த்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில்... ''விஜய் என்ற ஒருவருக்காக தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கிறார்கள். படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் தனி மனித விமர்சனம் வேண்டாம். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் தம்பி விஜய் மட்டும்தான்'' என்றார்.

 

Vijayan

 

சார்ந்த செய்திகள்