Skip to main content

விபத்துக்குள்ளான தி கேரளா ஸ்டோரி படக்குழு - விளக்கமளித்த நடிகை

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

Adah Sharma shares about accident

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. 10 நாளில் மொத்தம் ரூ.135 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இவர் தனது படக்குழுவினருடன் கரீம்நகரில் இந்து ஏக்தா யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தை சந்தித்தனர். இதனால் அவர்கள் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.  இந்த விபத்து குறித்து நடிகை அதா சர்மா கூறுகையில், "நான் நன்றாக இருக்கிறேன். எங்கள் விபத்து குறித்து பரவும் செய்திகளால் எனக்கு நிறைய மெசேஜ்கள் வருகின்றன. மொத்த படக்குழுவும் நலமாக இருக்கிறோம். பெரிதாக ஒன்றும் இல்லை, பெரிதளவு காயம் ஏற்படவில்லை. அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்