Skip to main content

நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான '83' படத்தின் ட்ரைலர் 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

83 movie trailer released

 

1983 கிரிக்கெட்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து ‘83’ என்ற படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாகவும், நடிகர் ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாகவும்  நடித்துள்ளனர். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகளை நிறைவுசெய்த படக்குழு, வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

இந்நிலையில், ‘83’ படத்தின் ட்ரைலரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியான இப்படத்தின் ட்ரைலர் 1 மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

 

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்