Skip to main content

3 கோடி சொகுசு காரை விபத்துக்குள்ளாக்கிய பிரபல நடிகரின் 10 வயது மகன்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

3 crore luxury car; Son of Ben Affleck, who was involved in the accident

 

அமெரிக்கத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பென் அஃப்லெக். உலகப் புகழ் பெற்ற 'டிசி' நிறுவனத்தின் 'பேட்மேன்' கதாபாத்திரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 'ஜெனிஃபர் லோபஸ்: ஆஃப் டைம்' என்ற ஆவணப் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'தி பிளாஷ்', 'ஹிப்னாடிக்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை ஜெனிஃபர் கார்னரை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து 2018-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனையடுத்து தற்போது ஜெனிஃபர் லோபஸைகாதலித்து வருகிறார். 

 

இந்நிலையில் சமீபத்தில் பென் அஃப்லெக், அவரது மகன் சாமுவேல் கார்னர் (10 ) மற்றும் ஜெனிஃபர் லோபஸ் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு சொகுசு கார் டீலரை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கே  பென் அஃப்லெக்கின் 3 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த லம்போர்கினி காரை அவரது மகன் சாமுவேல் கார்னர் எதிர்பாராதவிதமாக பின்னால் இருந்த பிஎம்டபிள்யு காரின் மீது மோதியுள்ளார். 

 

இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வாகனங்கள் எதுவும் பெரிதாகச் சேதமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பென் அஃப்லெக், "ஓட்டுநர் இருக்கையில் சாமுவேல் கார்னர் அமர்ந்திருந்த போது கார் முன்னும் பின்னும் அசைந்தது, பின்பு தெரியாதவிதமாக பின்னால் மோதியது" என்று கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்