பயஸின் முடிவுக்கு சௌரவ் கங்கூலி வரவேற்பு
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விஷ்ணு வர்தனுடன் இணைந்து ஆட இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் சம்மதம் தெரிவித்துள்ளதற்கு கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்கூலி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஒரு நல்ல முடிவை பயஸ் எடுத்துள்ளார். நிச்சயம் பயஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அவரது நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது என்று கங்கூலி தெரிவித்துள்ளார்.