Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2018 (23:51 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (0:8 IST)

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: பங்கேற்கும் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.? 

ஜல்லிகட்டில் முதல்வர் பங்கேற்பது, இதுவே முதல் முறை என்பதால் மாவட்ட நிர்வாகம் இப்போதிருந்தே முதல்வர் கலந்து கொள்ள இருக்கும் விழா மேடையை அலங்கரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் வீரர்கள், பொதுமக்கள் செல்பி எடுக்கும் விதமாக சினிமா ஆர்ட் டைரக்டர்கள் மதுரை அலங்காநல்லூருக்கு வரவழைக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. கடந்த முறை முதல்வராக இருந்த ஒபிஎஸ், கோர்ட் தடை மற்றும் மாணவர்கள் போராட்டம் என இருந்தால் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மதுரை வரை வந்தும் அவரால் கலந்து கொள்ள முடியாத நிலையில் திரும்பி சென்றார். ஆனால் இந்த முறை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வருவது வரலாற்று பதிவாகிறது என்கிறார்கள் அதிமுகவினர்.

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்


20 ஆண்டுகளுக்கு முன் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்கமுடியாது. இது சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முறை கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து சமூக நீதியை நிலைநிறுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

சசிகலா கணவர் எம்.நடராஜன் கோர்ட்டில் சரண்!


சிகலாவின் கணவர் நடராஜன், அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் 1994-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தனர். போலி ஆவணங்கள் மூலம் புதிய காரை, பழைய கார் என்று கூறி இறக்குமதி செய்ததால், அரசுக்கு ரூ.1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இந்நிலையில், பாஸ்கரன், சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைந்து, பிணை தொகையை செலுத்தி ஜாமீன் பெற்றுச் சென்றார். அதேபோல, சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவர் சார்பில் உத்தரவாத தொகையும், ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம்! 

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 14ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு நடந்து வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆதார் எண் பதிவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச வாய்ப்பு தரவில்லை: சட்டசபையில் தினகரன் வெளிநடப்பு!


ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 57,000 பேருக்கு வீடு கட்டித்தருவது தொடர்பாக பேச இருந்தேன். மீன் அங்காடியை தரம் உயர்த்துதல், குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாகவும் பேச இருந்தேன். உணவு இடைவேளை சமயத்தில் பேச வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறியிருந்தார். ஆனால் எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. இதை கண்டித்து இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வததாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!


முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆண்களை ஏமாற்றி வலையில் சிக்கவைத்த பெண் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. மைதிலி என தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்ட சுருதி படேல் இதுபோல் பலரிடம் மோசடி செய்துவந்ததும், அதற்காக வாடகை தாய், சகோதரரைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

பறவைக்காய்ச்சல் எதிரொலி - தமிழகத்தில் இருந்து கோழி மற்றும் முட்டைகள் எடுத்து செல்ல தடை! 

கர்நாடக மாநிலம் பெங்களுரில் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கார்நாடக மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கோழி, முட்டை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடியில் நோய் தடுப்பு மருந்து தெளிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி தீவனம், கோழிகள் போன்றவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இஸ்ரோ தலைவராக சிவன் நியமனம் - உற்சாகத்தில் ஊர்மக்கள்!


இஸ்ரோ இயக்குனராக சிவன் நியாமிக்கப்பட்டதை அடுத்து, அவருடைய சொந்த ஊரில் உறவினா்கள் நண்பா்கள் மகிழ்ச்சியில்உள்ளனர். தற்போது அவா் வாழ்ந்த வீட்டில் அவருடைய அண்ணி மற்றும் குழந்தைகள் வசிக்கிறார்கள். இவா்களை சந்தித்து சிவனின் நண்பா்கள் அவருடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவா்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். சிவனின் சொந்த ஊரைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தாங்களும் வருங்காலத்தில் விஞ்ஞானிகளாக ஆவோம் என்று உறுதிமொழி எடுத்தனா்.

மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்ய மசோதா தாக்கல்!

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மேயர்களை, கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய முறை கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையில் அதற்கான புதிய சட்டமும் இயற்றப்பட்டது. கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அதன் அடிப்படையில் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படுகிறது. அதற்கான சட்டமசோதாவை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின் படி, மாநகராட்சி மட்டுமல்லாமல் பேரூராட்சி மற்றும் நகராட்சியின் தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்வர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்..


வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், தொழிற்சங்கங்கள் தாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் என்பவரை நியமிப்பதாக தெரிவித்தனர். 2.44% அல்லது 2.57% ஊதிய உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்தியஸ்தரே தீர்மானிப்பார் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நாளை காலை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் எனவும் தொழிற்சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :