Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 28, டிசம்பர் 2017 (15:52 IST)
மாற்றம் செய்த நாள் :28, டிசம்பர் 2017 (15:52 IST)



திருப்பதி சென்று மைசூர் திரும்பிய
 3 பெண் பக்தர்கள் வேன் விபத்தில் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் மண்டலம் கே.ஜி. சத்திரம் அருகே பெங்களூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்த கர்நாடக மாநில பஸ் மீது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு மைசூருக்கு டெம்போ டிராவலரில் வாகனத்தில் வாடகைக்கு எடுத்து கொண்டு சென்ற சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 4   கொண்ட குடும்பத்தினர் 11 பேர் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் டெம்போ டிராவலர் வேனின் வலது புறம் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதில் இருந்த புஷ்பா, நிஷா, முனி ஆகிய மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மற்றவர்கள் சித்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூங்கனூர் டி.எஸ்.பி. சாமுண்டீஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

 இந்த விபத்து குறித்து டி.எஸ்.பி. செளடேஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 4 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கீழ் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து தனியார் டெம்போ டிராவலர் வேனில் மைசூரை சுற்றி பார்க்க சென்றனர். வேன் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் கே.ஜி. சத்திரம்  அருகே வந்தபோது கர்நாடக மாநில அரசு பஸ் மோதியதில் வேனின் வலது புறம் சேதமடைந்து அதில் இருந்த 3 பெண்கள்  உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

-அரவிந்த்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :