Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 28, டிசம்பர் 2017 (15:35 IST)
மாற்றம் செய்த நாள் :28, டிசம்பர் 2017 (15:35 IST)


ஆதாருடன் இணைக்கப்பட்ட 71 கோடி மொபைல் எண்கள், 82 கோடி வங்கிக் கணக்குகள்!

ஆதாருடன் மொபைல் எண்கள், வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு விடுத்து, அதற்காக காலக்கெடுவையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘பண மோசடி செய்வதில் இருந்து தடுப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக, வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், பிப்ரவரி 6, 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மொபைல் எண்களை ஆதாருடன் இணைப்பதும் கட்டாயம் ஆகிறது. அதன்படி, டிசம்பர் 8ஆம் தேதி வரை 71.24 கோடி புதிய மற்றும் பழைய மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 82 கோடி வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.

ஆதார் வழியிலான மொபைல் எண் சர்பார்த்தல் குறித்த சோதனை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனவும் அவர் அப்போது கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :