Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 28, டிசம்பர் 2017 (13:47 IST)
மாற்றம் செய்த நாள் :28, டிசம்பர் 2017 (13:47 IST)


மோடிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சனை! - இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்

மோடிக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால், அதற்குக் காரணமாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைக்க டிசம்பர் 25ஆம் தேதி சென்றிருந்தார் பிரதமர் மோடி. விழா முடிந்து தனது பாதுகாப்பு வாகனத்தில் அணிவகுப்பாக அவர் மற்றும் மற்ற விஐபிக்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் திட்டமிட்டிருந்த பாதையில் இருந்து மாறி சென்றனர். இதனால், மஹாமாயா மேம்பாலம் பகுதிக்கு அருகில் அவர்கள் சென்ற வாகனங்கள் சாலை நெரிசலில் சிக்கி நின்றன. 

மோடி செல்வதற்காக ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்டிருந்த சாலைகளில் இருந்து மாற்றுப்பாதையில் அவர் பயணித்த வாகனம் சென்றது. மேலும், மோடியின் வாகனத்திற்கு நெருக்கமாக பேருந்துகளும், மோட்டார் பைக்குகளும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மோடியின் வாகனம் வழிமாறி செல்லக் காரணமாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் திலீப் சிங் மற்றும் காவலர் ஜெய்பால் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளார் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் இரண்டு நாட்களில் அவர் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :