Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 28, டிசம்பர் 2017 (10:59 IST)
மாற்றம் செய்த நாள் :28, டிசம்பர் 2017 (10:59 IST)


யோகியின் மீதான வழக்கை ரத்து செய்த யோகி அரசு!

தன் மீதான வழக்கை ரத்து செய்ய புதிய சட்டம் ஒன்றை இயற்றி, அதை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளார் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத். 



உபி சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அது உத்தரப்பிரதேசம் கிரிமினல் சட்டம், 2017. இதன்படி, அரசியல்வாதிகளின் மீது நீண்டகாலத்திற்கு நிலுவையில் இருக்கும் வழக்குகளை ‘பொதுமன்னிப்பு’ என்ற பெயரில் ரத்து செய்யப்படும். இதன்மூலம், அந்த மாநிலத்தில் அரசியல்வாதிகளின் மீது நிலுவையில் இருந்த 20 ஆயிரம் வழக்குகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் மீதான வழக்கும் அடக்கம்.

1995ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான கோரக்பூரில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்திய குற்றத்திற்காக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யாநாத், நிதியமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, பாஜக அமைச்சர் சீதால் பாண்டே ஆகியோரின் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு தொடரப்பட்டு 22 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருக்கும் யோகி, அதை நீக்க புதிய சட்டம் ஒன்றை இயற்றி தன் மீதான வழக்கினை ரத்து செய்யச் வைத்துள்ளார்.

இதற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :