Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 28, டிசம்பர் 2017 (10:42 IST)
மாற்றம் செய்த நாள் :28, டிசம்பர் 2017 (10:42 IST)


மதச்சார்பற்றவர்கள் பற்றி பேசிய மத்திய அமைச்சரை நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் அமளி!

மதச்சார்பற்றவர்களைப் பற்றி அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சரை நீக்கக்கோரி எதிர்கக்ட்சியினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் அனந்த்குமார் ஹெக்டே. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசும்போது, ‘மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் சொந்த அடையாளங்கள் இல்லாதவர்கள். காலத்திற்கேற்ப இந்த சட்டம் மாறும். அதேபோல், சட்டத்தில் இருந்து மதச்சார்பற்ற என்ற வார்த்தையை நாங்கள் நீக்குவோம்’ எனப் பேசினார். 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நேற்றைய நாளில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தை முன்வைத்தார். அப்போது மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் இதுகுறித்து குரல் எழுப்பினர். ‘அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதச்சார்பற்றவர்கள் பற்றி அவதூறாக பேசிய அனந்த் குமார் ஹெக்டேவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்’ என கோஷம் எழுப்பினர்.

தமிழகத்தில் இருந்து திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அனந்தகுமார் ஹெக்டே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :