Add1
logo
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை! || ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்! || இன்றைய (18.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || பிரிண்டர் விலை ரூ.10000 தான்! பிரதி எடுத்த போலி கரன்ஸியோ ரூ.65 லட்சம்! -சிக்கிய நான்கு கில்லாடிகள்! || பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு! || நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (18.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பிரிண்டர் விலை ரூ.10000 தான்! பிரதி எடுத்த போலி கரன்ஸியோ ரூ.65 லட்சம்! -சிக்கிய நான்கு கில்லாடிகள்!
 ................................................................
பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு!
 ................................................................
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (22:1 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (22:1 IST)
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை!


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை  தவிர்த்துவிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில்  இதுவரை  இல்லாத வகையில்  மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் நேரடியாக ஆலோசனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ரேசனில் உளுத்தம் பருப்பும் நிறுத்தம்!

ரேசன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உளுத்தம் பருப்பு கொள்முதலை நிறுத்தி விட்டதாகவும், இனி ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விவேக் வீட்டில் சிக்கிய கள்ளத் துப்பாக்கிசசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள விவேக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.  பாஸ்போர்ட்டை வைத்திருந்த இடத்தில் இருந்து 3 துப்பாக்கிகள் கிடைத்தது.  ஒரு நபருக்கு இந்திய ஆயுத சட்டத்தின்படி அதிகப்பட்சமாக 2 துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. 2 துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதி பெற்றுள்ள விவேக், 3வதாக ஒரு லைசென்ஸ் பெறாத துப்பாக்கி வைத்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

 பா.ஜ.க.வின் அசிங்கம் பிடித்த பிரச்சாரம்! 

குஜராத்தில் பா.ஜ.க.வை ஒழித்துக்கட்ட படேல் சமூகம், சத்திரியர் சமூகம், தலித் சமூகம் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், படேல் சமூகத்தின் இளைய தலைவராக உருவெடுத்துள்ள ஹர்திக் படேலை அசிங்கப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.  ஹர்திக் படேலைப் போன்ற ஒருவர் இடம்பெற்றுள்ள ஆபாச விடியோவை யூ-டியூப்பில் ஏற்றி அதை பரப்பியுள்ளனர்.  ஹர்திக் படேலுக்கு எதிரான பா.ஜ.க.வின் இந்த அசிங்க அரசியலை ராகுல் காந்தியும் கண்டித்திருக்கிறார்.

சிறுவன் மீது ஆசிட் கலந்த 
மண்ணெண்ணெய் ஊற்றி தீவைப்புவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன்  இன்று காலை பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து சென்று தூக்கிச்சென்ற மர்ம நபர்கள், மாந்தோப்பில் வைத்து மண்ணெண்ணெய் கலந்த ஆசிட்டினை ஊற்றியுள்ளனர். சிறுவனின் மீது தீயைப் பற்றவைத்துள்ளனர். வலிதாங்க முடியாமல் துடித்த சிறுவன் தீக்காயங்களுடன் ஊருக்குள் ஓடிவந்துள்ளான்.  தற்போது சிறுவன் மோசமான நிலையில் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நிர்பயா வழக்கில் மரண தண்டனை
 ரத்து கோரி மனு டிச. 12ல் விசாரணை டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று 
வழங்கும் திட்டம் சாத்தியமா? கெஜ்ரிவால் ஆய்வுடெல்லியில் ரேஷன் பொருட்களை மக்களின் வசிப்பிடம் தேடி அளிக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தனியார் ஏஜென்சிகள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. எனினும், இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

அரசியல் சட்டத்தை மீறிய ஆளுநர்!
 தலைவர்கள் கண்டனம்

தமிழக சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுபவர் ஆளுநர். அரசியல் சட்டப்படி இதுதான் ஆளுநருடைய வேலை. இந்த நிலையில் அரசியல் சட்டத்தை மீறி ஒரு மாநில ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறி, கோவையில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநர் தானே நேரடியாக அதிகாரத்தில் தலையிடுவது இதுவே முதல் முறை. ஆளுநரின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். 

காதலியை உயிரோடு எரித்த வாலிபர்! சென்னையை ஆதம்பாக்கத்தில்  இளம்பெண் இந்துஜா(22)வை, அவருடன் ஒன்றாக படித்த அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்  ஒருதலையாக காதலித்துள்ளார்.  இந்துஜாவிற்கு  மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ஆகாஷ் , அவரிடம் தனது காதலைச் சொல்லி, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த இந்துஜா மீது தான்  பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில், இந்துஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்தியர்களுக்கான விசா நடைமுறையை 
தளர்த்தும் ஜப்பான்

சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கான விசா நடைமுறையை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :