இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கைவிடப்படவில்லை.
இந்தோனேஷியாவின் தென்மேற்கே பையான்கி நகரில் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவானதாக இந்தோனேஷிய வானியல் மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் கிழக்கு ஜாவா, பாலித்தீவுப்பகுதிகளிலும் உணரப்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.