அண்மைச் செய்திகள்
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்) || வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு! || கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி || ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் || கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில் || சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை || டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு ||
சனிக்கிழமை, 1, செப்டம்பர் 2012
தாக்கரேவின் குடும்பத்தினரே பீகாரிலிருந்து வந்தவர்கள்தான்: ராஜ் தாக்கரேவுக்கு திக்விஜய் சிங் பதிலடி
......................................
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம்: ராம்தேவ்
......................................
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது இந்தியா
......................................
லாரி-வேன் மோதல்: கோழிப்பண்ணை அதிபர் சாவு
......................................
நிலக்கரி சுரங்க விவகாரம்: காங்கிரசின் புதிய யோசனை
......................................
செப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என தகவல்?
......................................
கூலிப்படையை அழைத்து வந்த மாணவர்கள்! சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு!
......................................
அஸ்ஸாம் எண்ணெய்க் கிணற்றில் தீ விபத்து
......................................
பாஜகவுக்கு எதிராக இளைஞர் காங். மறியல்
......................................
ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ: பல லட்சம் மதிப்புடைய நூல், துணிகள் சேதம்
......................................
முருங்கைக்காய் பறித்த தகராறு: கணவன்-மனைவி தாக்குதல்
......................................
சோனியா காந்தி வெளிநாடு பயணம்!
......................................
இரட்டைக்கொலையை தொடர்ந்து கமுதியில் 2வது நாளாக பதட்டம்
......................................
சுஷ்மா சுவராஜ் - சோனியா காந்தி சந்திப்பு?
......................................
இந்தியா வருகிறார் ராஜபக்சே! நுழையக் கூடாது என போராட தயாராகும் பல்வேறு அமைப்புகள்!
......................................
குடியிருப்புகளில் இருந்து 35 மீட்டர் தள்ளியே செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்: புதிய விதிகள் அமல்
......................................
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தஞ்சை வீரர் முருகனின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
......................................
இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை! பள்ளியின் பின்புற வாசல் வழியே வெளியேறிய அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள்
......................................
பாஜகவால் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரிய களங்கம்: கபில்சிபல்
......................................
கார்-லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
......................................
பாராளுமன்றம் நடைபெற பாஜக ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது தவறான அணுகுமுறை: ஜி.கே.வாசன்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக காங். உறுதியாக உள்ளது: ஜி.கே.வாசன்
......................................
வசந்தம் சித்தா ஆயூர்வேத கிளினிக்
......................................
நாகை மீனவர்கள் 28 பேர் விடுதலை
......................................
கட்டுப்பாட்டுடன் சமூகப்பணியாற்ற வேண்டும்! திமுக இளைஞரணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
......................................
அரசு டவுன் பஸ்களில் ஓட்டைகள் அதிகம் இருப்பதால் சேரும் சகதியும் அடிப்பதாக பயணிகள் வருத்தம் (படங்கள்)
......................................
சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை (படம்)
......................................
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும்வரை பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து புறக்கணிக்கும்: வெங்கையா நாயுடு
......................................
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
......................................
பேரூராட்சி கவுன்சிலர் தீக்குளித்து தற்கொலை
......................................
தமிழகத்துக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 300 மெகாவாட் மின்சாரம்!
......................................
மோடி- சின்னசாமி ஸ்டேடியத்தை குறிவைத்த தீவிரவாதிகள்
......................................
வெள்ளைச்சாமி படுகொலை: கமுதியில் கடையடைப்பு
......................................
வரதட்சணை கொடுமைக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணா திராத்
......................................
தங்கம் : பவுனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு
......................................
காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் : ராம்தேவ் அறிவிப்பு
......................................
படவிழாவில் பரபரப்பு : நடிகை பிபாசாபாசு அணிந்திருந்த ஸ்கர்ட்டை உருவி ரசிகர்கள் ரகளை
......................................
ப.சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்கிறார் : யஷ்வந்த் சின்கா
......................................
ரஜினியை,அர்ஜூனை அனுப்பியது மாதிரி தண்ணீரையும் அனுப்புங்கள் : கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு
......................................
ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்டம்பர் 7, 8 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
......................................
ஆடாத ஆட்டம் ஆடினார்கள் : விஜயகாந்த் பேச்சு
......................................
நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
......................................
ஒரு லட்சம் வீடுகட்ட 1000 கோடி ஒதுக்கீடு : ஜெயலலிதா உத்தரவு
......................................
ஈகுவேடார் தூதரகத்திலேயே இருப்பேன் : சாங்கே
......................................
கல்லூரி பஸ் மீது ஆட்டோ மோதி: 7 பேர் படுகாயம்
......................................
சேலை விளம்பரம் ; வித்யாபாலனுக்கு 5 கோடி சம்பளம்
......................................
பி.எட்., தகுதியை பதிவு செய்தல்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
......................................
சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்
......................................
மான்கறியை ருசித்தாலும் தண்டனை!
......................................
கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்!
......................................
மும்பை போலீசாருக்கு ஆதராவக ராஜ்தாக்கரே குரல்
......................................
10 ஆயிரம் லஞ்சம் : திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கைது
......................................
குவார்ட்டர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி
......................................
ஆந்திர அழகி உதவியுடன் நேபாளி கொள்ளையர்களை பிடித்த போலீசார்
......................................
மாணவர்களை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை : நீதிபதி கோபம்
......................................
உலக அளவில் உணவு தானியங்கள் விலை கடும் உயர்வு ; உலக வங்கி எச்சரிக்கை
......................................
ராகுல் காந்திக்கு மன்மோகன் சிங் மீண்டும் அழைப்பு
......................................
கலைஞர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
......................................
முதலிரவு அறையில் புதுமண தம்பதி மர்ம மரணம்
......................................
ரஜினி-கமல் ஜோடியாக மீண்டும் நடிப்பேன் : நடிகை ஸ்ரீதேவி
......................................
பத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல் குளம் சட்டவிரோதமானது
......................................
ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 1, செப்டம்பர் 2012 (7:23 IST)

ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா


ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஜெனரல் விஜயகுமார் கலந்து கொண்டார்.

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ போலீஸ் படை பயிற்சி மையத்தில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 44 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது 22 மாநிலங்களை சேர்ந்த 664 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்களுக்கு பயிற்சியின் போது உடற்தகுதி, அணிவகுப்பு, ஆயுதப்பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளுதல், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழித்தல் குறித்து பயிற்சி அளிக்கபட்டது.

மேலும் இந்திய குற்றவியல் சட்டம், சி.ஆர்.பி.எப். சட்டம், மனித உரிமைகள், முதலுதவி, பேரிடர் மேலாண்மை, ஐ.பி.எஸ். பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அத்துடன் நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை கையாளும் வகையில் நான்கு வார கால வனப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பயிற்சி மைய முதல்வர் மனோஜ்குமார் துபே வரவேற்றார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் ஜெனரல் விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, பயிற்சி பெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

அத்துடன் சிறப்பாக பயிற்சி பெற்ற புஷ்பேந்திரகுமார், பட்டில்விஜய், அக்ஷயகுமார், சந்தீப்குமார் ஆகியோருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பயிற்சி பெற்ற வீரர்கள் போர் பயிற்சி, தீவிரவாதிகள் மற்றும் நக்சலட்டுகளை கையாளுதல், மோட்டார் வாகன சாகசம் உள்ளிட்டவை செய்து காட்டினர்.

பின்னர் விஜயகுமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 6 ஆயிரம் பேர் பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மீதம் உள்ள 8 ஆயிரம் பேர் பயிற்சியை நிறைவு செய்வார்கள்.

தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 5 ஆயிரம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இதனால் புதுப்பொலிவு பெற்று உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வடகிழக்கு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதத்தையும் மேற்குவங்காளம், மராட்டியம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியில் நக்சலைட்டுகளை சமாளிப்பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தீவிர பணியாற்றி வருகிறது.

நக்சலைட்டுகள் தற்போது நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதை சமாளிக்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. நவீன வெடிகுண்டுகள், ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக ராணுவத்தைப் போலவே சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. காஷ்மீர், வடகிழக்கு, மத்திய, தென்மண்டலம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொருத்தமட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை. இங்கு சிறப்பு அதிரடிப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளை குறி வைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் அங்குள்ள கிராமங்களில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நக்சல் தேடுதல் வேட்டையின் போது மனித உரிமைகள் மீறாமல் பார்த்துக் கொள்கிறோம். நக்சல்கள்தான் அத்து மீறி ஈடுபடுகின்றனர்’’ என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : s.selvamani,op Country : India Date :9/2/2012 12:24:06 PM
crp applpkatyan wantad wavsade