அண்மைச் செய்திகள்
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு || காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு || பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்) || மே18 - மாணவர்கள் நினைவேந்தல் கூட்டம் - வீடியோ || சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை ||
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012
விபத்தில் உயிரிழந்த நண்பரை பார்க்க வந்தவர் விபத்துக்குள்ளாகி மரணம்
......................................
கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை: பாசக்கார மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
......................................
இளம்பெண்ணுக்கு "மிஸ்டு கால்' கொடுத்ததால் மோதல்: 7 பேர் கைது
......................................
மோடியை பார்த்து பயப்படும் காங்கிரஸ் கட்சிக்காரர்களை நினைத்து பரிதாப்படுகிறேன்: பிரகாஷ் ஜவடேகர்
......................................
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை: புதுச்சேரியில் பரபரப்பு
......................................
திருப்பதி:ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் தரிசனம்
......................................
அமளிக்கு மத்தியில் நிறைவேறிய 2 மசோதாக்கள்
......................................
சென்னை: 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன
......................................
மன்மோகன் சிங்- ஆசிப் அலி சர்தாரி சந்தித்து பேச்சு
......................................
கல்வி கடன் வழங்குவதில் தமிழக வங்கிகள் முன்னணி
......................................
பாராளுமன்றம் ஒத்திவைப்பு: சமாஜ்வாடி கட்சியினர் தர்ணா போராட்டம்
......................................
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து: 2 பேர் பலி
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு கண்டனம்: ரெயில் மறியல் செய்தவர்கள் கைது
......................................
காட்டெருமை தாக்கி எஸ்டேட் அதிபர் சாவு
......................................
காவிரி நதிநீர் ஆணையம் விரைவில் கூட்டப்படும்: மத்திய அரசு தகவல்
......................................
நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்
......................................
புதிய ரோந்து கப்பல் ராஜ்கிரன் அறிமுகம்
......................................
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: 4 பேரின் ஜாமின் ரத்து
......................................
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
......................................
போலி ரப்பர் ஸ்டாம்ப்: சேலம் வட்டாச்சியர் அலுவலகத்தின் முன்பு திரிந்தவர் கைது
......................................
இளம் பெண்களை கிண்டல் செய்கிறார் மோடி: மத்திய மந்திரிகள்- தலைவர்கள் கண்டனம்
......................................
பெண்கள் அழகுபடுத்திக்கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்: மோடி ஆதங்கம்
......................................
தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவ​ளவன் அறிவிப்பு
......................................
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 55வது நினைவு தினம்
......................................
சென்னை சென்ட்ரலில் பா.ஜ.கவினர் திடீர் மறியல்
......................................
உண்மையான மாவீரன் யுவராஜ் சிங்: சச்சின் புகழாரம்
......................................
2012க்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பு: இந்திய வீரர் ஒருவரும் இடம்பெறவில்லை
......................................
விவாதத்தின் மூல‌மே உண்மை வெளிவரும்: சோனியா
......................................
ஊழலை ஒழிக்க பல்வேறு புதுமைகளை மத்திய அரசு புகுத்தி வருகிறது: நாராயணசாமி
......................................
பழம்பெரும் நடிகைகளுக்கு விருந்து அளித்த ஜெயலலிதா (படம்)
......................................
பூவுலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்துவிட்டேன்: தற்கொலைக்கு முன் மருத்துவர் கடிதம்
......................................
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை அவசியம் : சிஏஜி பரிந்துரை
......................................
சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது! வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
......................................
தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
அறந்தாங்கி அருகில் மர்ம காய்சலுக்கு ஆசிரியை உட்பட மூவர் பலி
......................................
சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர் (படங்கள்)
......................................
பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலி
......................................
பல்க் எஸ்எம்எஸ்களுக்கு தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம்
......................................
ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
......................................
கிரிக்கெட்டை விட விளம்பரங்களில் அதிக வருமானம் பார்த்த தோனி
......................................
நான் விரும்பும் வரை கிரிக்கெட்டில் நீடிப்பேன்: சக்கின் டெண்டுல்கர்
......................................
பொன்.ராதாகிருஷ்ணன் கைது: இல.கணேசன் கண்டனம்
......................................
ஜெயலலிதாவின் திருச்சி பயணம் ஒத்திவைப்பு
......................................
மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
......................................
திருச்சியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
......................................
கஷ்டம் தீர்க்கும் ஆலயம்
......................................
ஜெயலலிதா 3-ந்தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார்
......................................
குழந்தைகள் காப்பகங்களுக்கு 34 சலவை எந்திரங்கள்: ஜெயலலிதா உத்தரவு
......................................
கசாப்புக்கு தூக்கு உறுதி: சிவசேனா பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
......................................
பொன்.ராதாகிருஷ்ணன் கைது
......................................
தமிழகத்தை சிங்களவர்களுக்கு தாரை வார்த்து தருகிறார்களா? ; ஏற்காட்டில் போராட்டம்
......................................
ஜெ., பங்கேற்ற விழாவில் எம்.எஸ்.வி, ரஜினி,கமல், இளையராஜா,எஸ்.பி.பி. ( படங்கள் )
......................................
பழங்கால நகை விற்பதாக கூறி நூதன மோசடி : 40 வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் கைது
......................................
அரை ஏக்கர் நிலத்துக்காக மாமனார், மாமியாரை கொலை
......................................
கரூர் நகராட்சி பணிகள் தேக்க நிலை
......................................
“முட்டை” வரலாறு காணாத விலை உயர்வு
......................................
நான் இலவசங்களே வேண்டாம் என கூறவில்லை : விஜயகாந்த் பேச்சு
......................................
புலிகள் சரணாலய பகுதியில் சுற்றுலாவுக்கான தடை நீட்டிப்பு
......................................
கனிம வள கொள்ளையில் கடுமையான பிரிவுகளில் வழக்குகளை பதிய வேண்டும் : கிருஷ்ணசாமி
......................................
தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் ஓட்டம்
......................................
பாடங்களில் குறைவான மதிப்பெண்: 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை
......................................
குஜராத் கலவர வழக்கில் மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்
......................................
பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கைது
......................................
குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் : நரேந்திர மோடி
......................................
முகமூடி என்ற தலைப்பில் சினிமா படத்தை வெளியிட தடை கேட்டு வழக்கு
......................................
சென்னையில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது
......................................
ஜெ., மேடையில் கமல் பேச்சு
......................................
ஜெயலலிதா முன்பு ரஜினிகாந்த் பேசின பேச்சு : தலையில் அடித்துக்கொண்ட ‘சோ’
......................................
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே : ஜெயலலிதா பேச்சு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (7:47 IST)


சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே :
 ஜெயலலிதா பேச்சு

 

ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அவர் பேசும்போது, ''எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன்.
 
இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.


இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால் தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை” “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.


இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும்  டி.கே. ராமமூர்த்தி.


இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த  எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். 


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்’ திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை  கூ.மு. ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை  எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.


முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்;  மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்  எம்.எஸ்.வி. . ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்  எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
 

பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எஸ். விஸ்வநாதன்.


டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என்ற பாடலில் வரும் சோக இசை  டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும்.   சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர்  டி.கே. ராமமூர்த்தி .  அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர்  எம்.எஸ். விஸ்வநாதன் . எதிர்பாராத சூழ்நிலையில்  சுப்பராமன்  இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமன்-க்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.


இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை  ராமநாதன், மகாதேவன்,  ஆதி நாராயண ராவ்,  சலபதி ராவ்,  தக்ஷிணாமூர்த்தி,  சுப்பைய்யா நாயுடு,  இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். 


பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர்.  நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.  இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.


நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பது தான் உண்மை.


எனக்கு  நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன்.  காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன். 


விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.


தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள்.  அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்க்கிறது.  அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.


நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது.  ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது.


இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது.  இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது. இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.


“சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள்  கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், “உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது,  உடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி .


இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு ப்பிவிட்டவர்கள்.  உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு.
 

இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.

இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.

சங்கீதத்தைப்  பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.


இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.


இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை
திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.


ஒரு முக்கியமான கட்டத்தில், “ பலே ” என்று ஒரு குரல் கேட்டது.  அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை. 


லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி,  இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.


தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.


இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் “பொற்காலம்” என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது. 


இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய  எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.


சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி.  கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963-ஆம்  ஆண்டு விஸ்வநாதன் - ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.


இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட  விஸ்வநாதன்  ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : naduvan Country : Denmark Date :8/31/2012 8:48:05 PM
எம் எஸ் வி யும் ராமமூர்த்தியும் அதிகம் சாதித்துவிட்டு அளவாக அடக்கமாக பேசியவர்கள் ,அந்தக்காலத்தில் இன்றிருப்பதுபோல் உலகமயமாக்கல் தொடர்பாடல் வசதிகள் இல்லை ஒரு தொலைபேசி ஒரு ஊரில் ஒரு சிலரிடமே இருந்த காலம் அவர்கள் காலம் இன்றுபோல் அன்று வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் இன்று அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருந்திருப்பார்கள் அடித்த ஒவ்வொரு பாடலும் இசையும் முற்றிலும் மாறுபட்டது ஒன்றுபோல் மற்றப்பாடல் இருந்ததில்லை அதுவே அவர்களின் தனித்தன்மை .எனக்கு தெரிந்த வெள்ளைக்கார நண்பர்கள் அவரின் பாடல்கள் சிலவற்றைக்கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.டி எம் எஸ் குரலை ஆராய்ச்சிக்கு அனுப்பவேண்டும் என்றார்கள் அப்படி ஒரு கம்பீரம் இனிமை என்று பாராட்டினார்கள் நமது தமிழர்கள் எதையும் உடனடியாக மறந்து விடுவார்கள் கண்ட கண்ட சாக்கடைகளை தலையில் சுமக்கும் ஏமாளிகள் என அறிவாளர்கள் சொல்லியதுண்டு.
Name : Shaha.bi Country : Australia Date :8/31/2012 7:54:01 AM
இந்த அம்மா யாரிடமோ பழைய கதையை கேட்டுவிட்டு பாடம் நடத்தியிருகிறது .இளையராஜா முன்னிலையிலேயே இளையராஜாவிற்கு குட்டு வைத்திருக்கிறது. விழாவில் இ.ராஜாவின் முகத்தில் பலவிதமான போராமைக்குறிகள்.
Name : வி ஆனந்த் , கோயம்புத்தூர் . Country : India Date :8/30/2012 5:32:27 PM
மாநில அரசுகள் ஒருவரை திறமையின் காரணமாக பரிந்துரை செய்யும் போது அவரை அரயாமல் புறம்தள்ளியது கொடுமை ! பிற்காலத்தில் பிறந்த அபாச திரைபட பாடல் இசை அமைபவர்கள் எல்லாம் இந்த பத்ம விருதினை வாங்கி உள்ளார்கள் என்று நினைக்கும் பொது மனம் வருந்துகிறது . நிச்சயமாக காங்கிரஸ் அல்லாத மக்கள் அதரவு பெற்ற நம் முதலமைச்சர் அம்மா சொல்லும் அரசு மத்தியில் அமையும் போது அந்த பத்ம விருதுகளுக்கு உண்மையான மதிப்பு கிடைக்கும் . உண்மையுள்ள தமிழ் பற்றாளன் வி ஆனந்த் , கோயம்புத்தூர் .
Name : nkulandhaisamy Country : United States Date :8/30/2012 5:31:37 PM
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உங்க ஆளுக புறக்கணிப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க அது தெரியுமா அம்மா?
Name : rudra Date :8/30/2012 5:25:59 PM
ரியல்லி சூப்பர் ஸ்பீச்
Name : neethi Country : Denmark Date :8/30/2012 2:25:16 PM
ஜெயின் உண்மை வார்த்தைகளுக்கு நன்றி அடுத்து ஈடுஇணையற்ற குரல் அரசர் டி எம் எஸ் க்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்பது அவரை நேசிப்போர் ஆசை
Name : nanthan Country : Singapore Date :8/30/2012 11:21:43 AM
கிரேட் ஸ்பீச் அம்மா
Name : TAMIL Country : Australia Date :8/30/2012 9:55:33 AM
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
Name : alagarsamy Date :8/30/2012 9:21:53 AM
அருமையான பேச்சு