பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: கபில் சிபல்
நிலக்கரி ஊழல் சுரங்க விவகாரத்தில் பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் காரணம் அல்ல. சுரங்கங்களை ஏலம்விட சம்மந்தப்பட்ட மாநிலங்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1993ஆம் ஆண்டியிலிருந்து நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீடு நடந்து வருகிறது. அப்போது மன்மோகன் சிங் பதவியில் இல்லை. 2005க்கு முன்பு என்ன நடந்தது. மாநில அரசுகள் ஏலத்தை விரும்பவில்லை. சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இந்த மாநிலங்களில்தான் சுரங்கங்கள் உள்ளன என்றார்.