ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்
'ஊழலுக்கு எதிரான அன்னா குழுவை, அன்னா ஹசாரே கலைத்திருப்பது பாபா ராம்தேவுக்கு பெரும் பின்னடைவு ஆகும். எனவே ஊழல் மற்றும் கறுப்புப்பணத்துக்கு எதிரான தனது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ராம்தேவ் மீண்டும் யோகாவில் கவனம் செலுத்தவேண்டும்’ என ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள லாலு, ‘உண்ணாவிரதத்தைத் தொடரும் திறன் அன்னா குழுவினருக்கு இல்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் ஓடிவிட்டனர். இது ராம்தேவுக்கு பெரும் பின்னடைவாகும். எனவே ராம்தேவ் இனி யோகாவில் மட்டும் கவனம் செலுத்தட்டும்’ என்று கூறியுள்ளார்.