நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவக்கம்
அசாம் வன்முறை, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வறட்சி என நாடு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவங்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் நாளே, அசாம் கலவரம் குறித்து கேள்வி எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், சுரங்க ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.