இரண்டாவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 500 பேருக்கும், மீண்டும் பணி வழங்கக்கோரி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறிய-ல் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்று தேனியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறிய-ல் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் தேனி கம்பம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறிய-ல் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரத்தில் திரண்ட மக்கள் நலப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறிய-ல் ஈடுபட்டனர். தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறிய-ல் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் பணி வழங்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.