சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கைது
கோவையில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் சட்டக்கல்லூரியை அனுமதிப்பதை எதிர்த்து கோவையில் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
அவர்கள் கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறியபோது, அவர்களில் 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.