சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் முற்றிலும் நவீனமயமாக்கப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் உந்து சக்தி குறைவு காரணமாக அவ்வப்போது ஆங்காங்கே நின்று விடுகிறது. எனவே பயணிகள் சிரமமின்றி சென்று வரும் வகையில் மலை ரயில் 3 பெட்டிகளாக குறைத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலை ரயிலின் பெட்டிகளை சீரமைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மலை ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டிலும், ஒரு பொது பெட்டியிலும் இருக்கைகள் மாற்றப்பட்டு, கண்ணாடியுடன் கூடிய ஜன்னல்கள் பொருத்தப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. குன்னூர் ரயில்வே பணிமனையில் உள்ள இந்த மலை ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் விடப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.