விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
மராட்டிய மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக், கடந்த சில தினங்களாக கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மாலை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு. பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை யில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.