அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
வேலூரில் மாநகராட்சி வார்டு நிர்வாகிகள் தேர்வின் போது, இரண்டு தரப்பினர், அமைச்சர் முன்னிலையில் நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க., வார்டு நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்வு செய்ய, சில நாட்களுக்கு முன், விருப்ப மனு வாங்கப்பட்டது. வார்டு நிர்வாகிகளை தேர்வு செய்ய, அ.தி.மு.க., அலுவலகத்தில், அமைச்சர் விஜய் தலைமையில் கூட்டம் நடந்தது.
வெளியே, ராஜா, கவுன்சிலர் சூளை செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கினர். இதையடுத்து, 35வது வார்டு நிர்வாகிகள் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து, தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பியிருக்கின்றனர்.