விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
விருதுநகர் முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் வீடியோ நிறுவனம் நடத்தி வருபவர் கார்த்திக் (வயது35), ஏ.கே.பாலன் (47). இவர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு எதுவும் சிக்கவில்லை. கார்த்திக் கின் வீடு விருதுநகர் ஏழு கிட்டங்கி தெருவில் உள்ளது. அந்த வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் 10 கட்டுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி கார்த்திக் மற்றும் ஏ.கே.பாலனிடம் போலீசார் விசாரணை நடத் தினர். விசாரணையின்போது கார்த்திக், கள்ள ரூபாய் நோட்டுகள் தங்கள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அச்சடித் ததாக கூறி உள்ளாராம். மேலும் இவர்கள் இருவருக்கும் உதவியதாக அல்லம் பட்டியை சேர்ந்த ராமன் என்பவரை பிடித்தும் போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தான் இந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தார்களா? அல்லது இவர்களுக்கு பின்ன ணியில் கள்ள நோட்டு கும்பல் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.