விஜயகுமாருக்கு 1 கோடி பரிசு
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் விஜயகுமாருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க உள்ளதாக அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதனை இமாச்சல பிரதேச முதல்வர் பிரேம்குமார் துமல் இன்று அறிவித்துள்ளார்.