சியோன் பள்ளி தாளாளர் தம்பிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
தாம்பரம் அருகே சியோன் பள்ளி மாணவி சுருதி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து இறந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நேற்று பள்ளி தாளாளர் விஜயனின் தம்பிகளான ரவி, பவுல்ராஜ் ஆகியோரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி பொறுப்பு சு.வில்லியம்ஸ் உத்தரவிட்டார்.
இதுபோல ஆர்.டி.ஓ. சீமான் என்பவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கள் கிழமையன்று நடைபெறவுள்ளது.