தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் 9 மற்றும் 10&ம் வகுப்பு படித்துவிட்டு, கிளினிக் நடத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. இந்த சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல மாவட்டங்களில் போலி டாக்டர்கள் அதிகரித்து விட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாவட் டந்தோறும் போலி டாக்டர்கள் குறித்து சோதனை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்து வருகின்றனர்.
ரெய்டில் சிக்கிய போலி டாக்டர்களின் சிகிச்சையால் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.