பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
இந்தியாவின் பருவ மழை ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் வழக்கத்தை விட 85% மட்டுமே பெய்யும் என்றும், 15% குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
50 ஆண்டுகளாக இந்தியாவின் பருவமழை சராசரி 89 சென்டிமீட்டராக உள்ளது. இது இந்த ஆண்டு குறையக் கூடும் என்றும், சில பகுதிகளில் வறட்சி நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எல்.எஸ். ரத்தோர் தெரிவித்துள்ளார்.