முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
முன்னாள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) முன்னாள் தலைவரான 71 வயதான கே.எஸ். சுதர்சன் மைசூரில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று (03.08.2012) காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சிக்குக் கிளம்பினார்.
பொதுவாக அவர் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது அவருடன் பாதுகாவலர்களும் செல்வார்கள். ஆனால், இன்று காலை அவருடன் யாரும் செல்லவில்லை. அவருக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால், நடைப்பயிற்சிக்குச் சென்ற சுதர்சன் திரும்பி வரவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அவரை மைசூர் போலீசார் தேடி வருகிறார்கள்.