அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, வரும் 6ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 8ம் தேதி துவங்கி, ஒரு மாத காலம் நடைபெறவுள்ள பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், சுமுகமாக நடைபெறுவது குறித்து ஆலோசிக்கவும், இது தொடர்பாக கட்சித் தலைவர்களிடம் இருந்து உத்தரவாதம் பெறவும், வரும் 6ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் மீரா குமார் ஏற்பாடு செய்துள்ளார்.