கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ் - சானியா மிர்சா ஜோடி, செர்பியாவின் நெனட் ஜிமோன்ஜிச்- இவானோவிச் இணையுடன் மோதியது. 64 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பெயஸ்-சானியா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை சுவைத்து கால்இறுதிக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் சானியா ஜோடி, போட்டித் தரநிலையில் முதலிடத்தில் உள்ள மேக்ஸ் மிர்னி - விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) கூட்டணியை எதிர்கொள்கிறது.
டென்னிசில் இந்திய தரப்பில் கலப்பு இரட்டையர் ஜோடி தவிர மற்ற அனைவரும் தோற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.