தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீக்காயம் மட்டுமல்லாமல், புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் இந்த 9 பேரையும் சென்னைக்கு மேல் சிகிச்சைக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.