ஜூடோ: கொரியா தங்கம் வென்றது
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான (90 கிலோ எடைப்பிரிவு) ஜூடோ போட்டிகள் நடைபெற்றன. இதில் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில் கொரியாவின் நாம்-சாங் டீ-கியூபாவின் ஆஸ்லே கான்சலஸ் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 0101-0001 என்ற புள்ளிகணக்கில் கொரிய வீரர் வெற்றி பெற்று தங்கம் வென்றார். கியூபா வீரருக்கு வெள்ளி கிடைத்தது. முன்னதாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகளில் கிரீஸ் வீரர் இலியாதிஸ், ஜப்பான் வீரர் நிஷியாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான ஜூடோ போட்டியும் நடந்தது. இதில் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை டெக்கோசி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பிரான்ஸ் அணி பதக்க பட்டியலில் 4-ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு முன்னேறியது. ஜெர்மனியின் தியேல் வெள்ளிப் பதக்கமும், கொலம்பி யாவின் ஆல்வியர் மற்றும் நெதர்லாந்தின் போஸ்ச் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.