ராஜஸ்தான் முதல்வரைச் சந்தித்தார் ராணுவத் தளபதி
இந்திய ராணுவப் படை தளபதியான பிக்ராம் சிங், இரண்டு நாள் பயணமாக தென்மேற்கு ராணுவப் பிராந்தியத்துக்குச் சென்றுள்ளார். இன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அந்தப் பிராந்தியத்தில் போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் அவர்களுக்கிடையே ஏற்படுத்த வேண்டிய புரிந்துணர்தல் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.