3 லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் சிறைபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்துள்ளது சத்திரப்பட்டி கிராமம். இங்கு 18 ஏக்கர் 32 செண்ட் நிலத்தில் மாயாண்டி குளம் உள்ளது. இந்த குளத்தில் அரசு அனுமதி இல்லாமல் ராமர் என்பவர் கடந்த சில மாதங்களாக மணல் அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள பண்ணைப்பட்டி குளத்தில் மணல் அள்ள அரசு அனுமதி பெற்று அந்த பெர்மிட்டை வைத்து மாயாண்டி குளத்தில் மணல் அள்ளி உள்ளார். ஜே.சி.பி இயந்திரத்தை வைத்து மணல் அள்ளியதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை மாயாண்டி குளத்தில் மணல் அள்ளிக்கொண்டிந்த ஒரு ஜே.சி.பி இயந்திரம் மற்றும் 3 லாரிகளையும் பொது மக்கள் சிறைபிடித்தனர்.