பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்து: 16 பேர் பலி
உத்திரகாண்ட் மாநிலம் சாக்ராடா என்ற இடத்திற்கு அருகே 47 பயணிகளுடன் வந்த பஸ் ஒன்று கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.