வட மாநில ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்?
வட மாநிலங்களில் கடுமையான மின் தடை காரணமாக ரயில்களின் சேவை முடங்கியுள்ளது. ரயில்கள் இயக்கப்படுவது குறித்து உறுதியான தகவல் இல்லாததால், பல ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.தங்களது ரயில் வரும் போது டிக்கெட் எடுக்க முடியாமல் போய்விடக் கூடாது என்பதால் பயணிகள் அனைவரும் டிக்கெட் கவுண்டர்களின் முன் குவிந்துள்ளதால் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.