ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர்: 6 பேர் பலி
அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் இன்று காலை ஆம்புலன்ஸ் ஒன்றின் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் பலியானார்கள். பெண் நோயாளியான ஜெய ஸ்ரீ பாசுமாத்ரியுடன் அவரது உறவினர்களான ஐந்து பேரையும் ஏற்றிக்கொண்டு சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தெலமாரா என்ற இடத்திலிருந்து கவுகாத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்துக்கு உள்ளானது. லாரி டிரைவரும் கிளினரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.