அரசு அதிகாரிகள் சிறைப்பிடிப்பு: திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக கூறி அதிகாரிக்ள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வேப்பந்தாங்குடி ஊராட்சியில் தொழிலாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், சிறைப்பிடித்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.132 வழங்கப்படும் என கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரிகள் இதுவரை செயல்படுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
அரசு அறிவித்த ஊதியத்தை தராததால், பணிகளை பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை, தொழிலார்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர்.
பின்னர் கோட்டாட்சியரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் சமரசம் பேசி அதிகாரிகளை மீட்டனர்.