புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததார். இந்த தேர்தலில் அவர் சார்ந்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார். ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கும் தனது கட்சிக்கு அவர் ‘தேசிய உள்நாட்டு மக்கள் பார்ட்டி ஆப் இந்தியா’ என பெயரிட்டு உள்ளார்.