அண்மைச் செய்திகள்
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! || சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்! || தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நியமனம் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட் || கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல் || சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல் || ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் || தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) || கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது! || இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்! ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஜூலை 2012
தமிழ்நாடு விவசாயிகளுக்கு பயிற்சி
......................................
16 வயது இளம்பெண்ணுடன் மர்லின் மன்றோ தொடர்பு : டோனி ஜெர்ரிஸ் எழுதிய புத்தகத்தின் பரபரப்பு
......................................
மாணவிகளின் ஆடைகளை களைந்து, அந்தரங்க உறுப்புகளை தொட்டு பாடம் நடத்திய பேராசிரியர்
......................................
இந்தியா & பாக். இடையே சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
......................................
சென்னையில் உமா பாரதி ஆலோசனை
......................................
நரேந்திரமோடி புலியை போன்றவர்: காங். எம்.பி.
......................................
மேட்டுப்பாளையம்:யானைகள் புத்துணர்வு முகாம்
......................................
புகையிலை பயன்படுத்துவதில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்
......................................
ஜெயலலிதா ஆதரவு அளிப்பார் : ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை
......................................
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
பெற்ற மகளிடம் தந்தை செக்ஸ் டார்ச்சர் : மதுரை கோர்ட்டில் விசாரணை
......................................
பிரபாகரன் படங்களுக்கு தடை விதித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம். : சீமான்
......................................
போதை பாக்குகளுக்கு தடை கோரி ராமதாஸ் போராட்டம்
......................................
அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும் : சிரஞ்ஜீத்
......................................
ப. சிதம்பரம் வீடு முற்றுகை : அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கைது
......................................
தொழில் அதிபர் மகனை கடத்திய கார் டிரைவர் கைது
......................................
தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது தாக்குதல்
......................................
விமான மூலம் சுறாமீன் பற்களை கடத்த முயற்சி
......................................
ஒலிம்பிக் போட்டி: சீனாவுக்கு ஒரே நாளில் 4 தங்கம்
......................................
கர்நாடகத்தில் மேலும் 19 தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்பு
......................................
காங்கிரஸ் கட்சியை சாய்த்துவிடலாம் என்பது பாஜகவின் எண்ணம் : ஜி.கே. வாசன்
......................................
காமராஜர் பதவியில் இருந்து விலகி என் தாத்தா பக்தவசலத்தை முதல்வாக்கினார் : ஜெயந்திநடராஜன்
......................................
அவ்வையின் இறுதி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
......................................
சேப்பாக்கம்-துறைமுகம் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மாற்றம்
......................................
அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
......................................
பெயில் ஆக்கிவிடுவதாக மிரட்டி மாணவிகளிடம் ஆசிரியர் செக்ஸ் தொந்தரவு
......................................
என்னை எச்சரிப்பது சரியல்ல : அச்சுதானந்தன் ஆவேசம்
......................................
அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம்
......................................
அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: 2016லு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
......................................
தனிமையில் சந்திக்கும் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த பொதுமக்கள்: மறுநாளே பிரிந்து சென்றனர்
......................................
தி.மு.க. சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.21/4 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்
......................................
வாய்க்காலை கடக்க முயன்ற 10 வயது யானை கீழே விழுந்து சாவு
......................................
செல்போனில் இளம்பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது
......................................
இலங்கை கடற்படையினர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர்: ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள்
......................................
நாகர்கோவில் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு
......................................
போதையில் இளம்பெண்கள் வாலிபர்களுடன் கும்மாளம்: இந்து அமைப்பினர் புகுந்து தாக்குதல்
......................................
இலங்கை அணியில் சங்கக்கரா விலகல்!
......................................
லண்டன் ஒலிம்பிக்கில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்றது
......................................
பாஸ்போர்ட் முறைகேடு: உலக அளவில் பாகிஸ்தானுக்கு முதலிடம்: இங்கிலாந்து தூதர்
......................................
பள்ளி, கல்லூரி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை உருவாக்க 6 பேர் குழு அமைப்பு
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஜூலை 2012 (8:35 IST)



பள்ளி, கல்லூரி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை உருவாக்க 6 பேர் குழு அமைப்பு

பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி சுருதி பலியான சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் உத்தரவிட்டபடி, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்குவதற்காக போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் (விதிகள்) ராதாகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.


சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவி சுருதி (வயது 6), அந்தப் பள்ளிக்கூட பஸ்சில் வீட்டுக்கு திரும்பும் வழியில், பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். அப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தாள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் தன்னிச்சை வழக்காக எடுத்து விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவின்பேரில் போக்குவரத்துத்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-


இதுபோன்ற மரணங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும். அதற்கான நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு, மோட்டார் வாகன சட்டத்தின் 62-வது பிரிவின்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக தனி விதிகளை ஏற்படுத்த வேண்டும். அதன்படி, பள்ளிக்கூட பஸ்களை கட்டுப்படுத்தி பராமரிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தி, அந்த பஸ்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான வாகனம், ஒப்பந்த வாகனம் என அனைத்து வாகனங்களும் இந்த கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை தயாரித்து 2 வாரத்திற்குள் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதையடுத்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி பஸ்களுக்கு என்ன வகையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.


போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் (விதிகள்) தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில், நெல்லை போக்குவரத்துத் துறை துணை கமிஷனர் பாலன், சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.), பூந்தமல்லி மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார், மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளர்கள் லட்சுமி நாராயணன், லட்சுமிபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்தக் குழு, பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி பஸ், வேன் போன்ற வாகனங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்கும். இந்தப் புதிய விதிமுறைகள் ஒரு வாரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதையடுத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சட்டத் துறையுடன் ஆலோசித்து, அரசு இறுதி முடிவு எடுக்கும். இதனிடையே, 2 வாரத்திற்குள் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்ட அறிக்கையை ஐகோர்ட்டில் அரசு சமர்ப்பிக்கும் என்று போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : muthupettai ayub Date :7/29/2012 8:59:38 AM
முந்தய தி. மு.க.ஆட்சியில் -வேதாரணியத்தில் பள்ளி வேன் குழைந்தகளுடன் குளத்தில் மூழ்கியது அதன் பிறகு-தமிழகம் முழுவதும் பள்ளிகூட வேன்களை சோதனை செய்தார்கள் அதன் பிறகு அதிகாரிகள் தூங்கிவிட்டார்கள் -பிறகு மற்றொரு சம்பவம் நடந்தபிறகுதான் விழித்துஇருக்கிறார்கள் .நமது ஹைகோர்ட் சொன்னபடி அதிகாரிகள் உடனே இறங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இது அவசியமும் அவசரமும் ஆகும் --நமக்கு என்ன என்று மீண்டும் தூங்கிவிடாதீர்கள்